தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.4.11

குர்ஆன் எரிப்பு, ஆப்கான் கலவரம் – ஒபாமா கண்டனம்


obama
வாஷிங்டன்: அமெரிக்க நகரம் ப்ளோரிடாவில் நடந்த புனித குர்-ஆன் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ஆப்கான் காந்தஹாரில் உள்ள மஜார்-எ-ஷரீப் என்ற இடத்தில் கலவரம் மூண்டதை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கண்டித்துள்ளார்.
இது குறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில், குர்-ஆன் எரிப்பு என்பது  பொருட்படுத்த முடியாத  ஒரு மத அவமதிப்பு சம்பவம் ஆனால் அதற்காக அப்பாவி மக்களை கொள்வது என்பது ஒரு மிருகத்தனமான செயல்,  இது மனித கண்ணியத்திற்கு புறம்பானது என்று கூறியுள்ளார்.

ஆப்கானில் நடந்த கலவரத்தில், முதல் நாளில் (கடந்த வெள்ளிகிழமையன்று) 7 ஐ.நா. அதிகாரிகள் உட்பட 11  பேர் கொல்லப்பட்டனர். இரண்டாவது நாளும் தொடர்ந்த கலவரத்தில், 9 பேர் கொல்லப்பட்டனர், 80திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மனிதர்களின் தலைகள் துண்டிப்பது என்பது எந்த மதத்திலும் குறிப்பிடாததொன்று   என்றும் ஒபாமா மேலும் தெரிவித்தார். அனைத்து மனித குலத்திற்கு ஒரு பொதுவான சட்டத்தை இயற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
ஏழை, எளிய மக்களுக்கு தங்களுடைய நிலைமையை முன்னேற்ற நேரம் இல்லாத பொழுது, மதத்திற்காக வன்முறையில் ஈடுபட எங்கே நேரம் உள்ளது,  எதற்காக அவர்கள் பாதிக்கப்படவேண்டும். இது அனைத்து மக்களும் ஒன்றாக செயல் பட வேண்டிய நேரம். “நோ ரிளிஜிஸ், நோ டாலரன்ஸ்” என்று ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர் தன்னுடைய எதிர்ப்பை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: