தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.3.11

சங்கராச்சாரியாரை காப்பாற்ற கருணாநிதி முயற்சி!!


சங்கரரராமன் கொலை வழக்கில் சிக்கியுள்ள ஜெயேந்திரரைக் காப்பாற்ற கருணாநிதி முயற்சி எடுத்து வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தலைமைச் செயலக வட்டாரங்கள் இது குறித்து தெரிவிக்கையில், நேற்று, இந்த வழக்கின் முன்னாள் புலனாய்வு அதிகாரி சக்தி வேல் என்பவரை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து, உள்துறைச் செயலாளர் ஞானதேசிகன், பொதுத்துறை செயலாளர்

கருத்தைய்யா பாண்டியன், சட்டத்துறை செயலாளர் தீனதயாளன் மற்றும் தலைமைச் செயலாளர் மாலதி ஆகியோர், மூன்று மணி நேரத்துக்கும் மேலாகஆலோசனை நடத்தினர்.

ஜெயேந்திரர் வழக்கில் உள்ள பலவீனங்கள் என்ன, தீர்ப்பு எப்போது வரும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி விட்டு, இந்த வழக்கின் தீர்ப்பை தேர்தலுக்கு முன் வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளனர். ஜெயேந்திரர் கைது செய்யப் பட்டதால், பிராமணர்கள் ஜெயலலிதா மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும், ஜெயேந்திரர் தேர்தலுக்கு முன் விடுதலை செய்யப் பட்டால் பிராமணர்கள் வாக்குகள் அத்தனையும், தனக்கு விழும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

அதிகாரிகளைச் சந்தித்த பிறகு, இறுதியாக சக்திவேல், கருணாநிதியை அவரது அறையில் சந்தித்த போது, அந்த அதிகாரிகள் சொன்னதை நிறைவேற்றுமாறு, சக்திவேலிடம் தெரிவிக்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, புதுவை முதல்வர் வைத்தியலிங்கத்திடமும், கருணாநிதி தொலைபேசியில் பேசி, வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 13க்குள் வருவதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: சிந்திக்கவும்

0 கருத்துகள்: