தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.1.11

கறுப்புப் பண விவரத்தை பகிரங்கமாக வெளியிட முடியாது: பிரதமர்

கறுப்புப் பணம் குறித்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட முடியாது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். மத்திய அமைச்சரவை மாற்றத்திற்குப் பின் செய்தியளார்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் உரையாடினார்.

அப்போது, கறுப்புப் பண முதலைகளின் பட்டியலை வெளியிட மறுப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மன்மோகன்சிங் கூறியதாவது:

வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவதற்கு உடனடி திடீர் தீர்வு எதுவும் இல்லை. இந்த வங்கி கணக்குகள் தொடர்பாக உரிய வரியை வசூலிப்பதற்காக சில தகவல்கள் மத்திய அரசுக்கு கிடைத்து உள்ளன.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு என்ன கூறியிருக்கிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால், என்ன நோக்கத்திற்காக அந்த கணக்கு விவரங்கள் கிடைத்து இருக்கிறதோ, அதை தவிர வேறு எதற்கும் அந்த தகவலை பயன்படுத்த முடியாது. அதை பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாகவும் அறிவிக்க முடியாது. சர்வதேச ஒப்பந்தங்களை மீறி இதில் நாம் எதுவும் செய்துவிட முடியாது.''

இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி நாடாளுமன்றம் முடக்கப்படுவதற்கு சுமூக தீர்வு காண்பதற்கு அரசு தயாராக உள்ளது. அதற்கான அனைத்து வழிமுறைகள் பற்றியும் பரிசீலிக்கப்படும்.

நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்றும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் அங்கு விவாதிக்கப்பட வேண்டும் என்றுதான் அரசு விரும்புகிறது. எந்த ஒரு விவாதத்துக்கும் நாங்கள் பயப்படவில்லை.

விலைவாசி உயர்வை பொறுத்தவரை சில அம்சங்கள் அரசின் கட்டுப்பாட்டை மீறியதாக உள்ளது. அதுபற்றி உறுதியாக கணித்துச் சொல்வதற்கு நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல. ஆனால், வருகிற மார்ச் மாதத்திற்குள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

தனி தெலுங்கானா விவகாரம் குறித்து ஆந்திர மாநில அரசியல் கட்சி தலைவர்களுடன் மத்திய உள்துறை மந்திரி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கை விவரங்களை அவர்கள் முழுமையாக படித்து பார்த்தபின் இந்த கோரிக்கை குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.
என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.  நன்றி: தட்ஸ் தமிழ்  இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

0 கருத்துகள்: