தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.1.11

மொத்த உற்பத்தி: அமெரிக்காவை மிஞ்சியது சீனா

டெல்லி: மொத்த உற்பத்தியில் உலகின் சூப்பர் பவர் எனக் கருதப்பட்ட அமெரிக்காவை மிஞ்சிவிட்டது சீனா என்று புதிய புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் இதுபற்றி சர்வதேச பொருளாதார அமைப்புகள் அறிவிப்பு வெளியிடாமல் உள்ளன.

உலக நாடுகளின் மொத்த உற்பத்தி (ஜிடிபி), வாங்கும் திறன் போன்றவை குறித்த புதிய புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

பென்சில்வேனியாவைச் சேர்ந்த பென் வேர்ல்ட் டேபிள் (Penn World Table) கணக்கீட்டின்படி (இந்த புள்ளி விவரம் இன்னமும் வெளியிடப்படவில்லை), ஜிடிபியில் உலகிலேயே முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டது சீனா. இதன்படி சீனாவின் மொத்த உற்பத்தி 14.8 ட்ரில்லியன் டாலர்களாகும் (முன்பு 10.1 ட்ரில்லியன் என மதிப்பிடப்பட்டது). சீனாவின் நகர்ப்புற விலை நிலைகளின் அடிப்படையிலும், சீன நாணத்தின் மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலும் கணக்கிடப்பட்ட மதிப்பீடு இது.

அமெரிக்காவின் ஜிடிபி மதிப்பு 14.6 ட்ரில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கணக்கீட்டின்படி இந்தியா வின் மொத்த உற்பத்தி மதிப்பும் 13 சதவீதம் உயர்ந்துள்ளதாம். இதன்படி இந்தியாவின் ஜிடிபி 4.4 ட்ரில்லியன் டாலர்கள் (முன்பு 4 ட்ரில்லியன்) என்று கூறப்படுகிறது.

இன்னும் இந்த புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வ வெளியிடப்படவில்லை என்றாலும், உலகம் முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

0 கருத்துகள்: