தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.1.13

ஆபிரிக்கா மாலிக்கு படைகளை அனுப்ப பிரான்ஸ் தயாராகிறது


ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள மாலி நாட்டில் அல்  காய்தா அமைப்பின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக் கள் நாட்டின் வடபுலத்தை பெரும்பாலும் கட்டுப் பாட்டில் கொண்டு வந்துவிட்டன.இந்த நிலையில் மாலி நாட்டு அதிபர் டியோன் கவுண்டா தரோற் பிரா ன்சிய படைகளின் உதவியை கோரி அவசர வேண்டு கோள் விடுத்திருந்தார்.இதைத் தொடர்ந்து மாலி நோக்கி பிரான்சிய படைகளை அனுப்புவதற்கான உத்தரவை அதிபர் பிரான்சியோ ஒலந்த விடுத்துள் ளார்.மாலியில் நிலமை
மோசமடைந்து பயங்கரவாத அமைப்பொன்று வெற்றிபெறும் நிலை உருவானதைத் தொடர்ந்து ஐ.நா வின் பாதுகாப்பு சபை சென்ற மாதம் அவசரமாகக் கூடியது தெரிந்ததே.
அதைத் தொடர்ந்து மாலியில் ஏற்படும் நகர்வை தடுக்க ஆகவேண்டிய அனைத்தையும் செய்யும்படி பாதுகாப்பு சபை உத்தரவு வழங்கியிருந்தது.
ஆபிரிக்க தேசிய படைகளை மாலிக்கு அனுப்பலாம் என்ற யோசனையையும் ஐ.நா வழங்கியிருந்தது.
நேற்று வியாழன் சுமார் 1200 பேர் கொண்ட அல் குவைடா படைகள் மொப்ரி நகரை நெருங்கியிருந்தன, இந்த நிலையில் அவர்களை தடுக்க வேண்டிய பொறுப்பு பிரான்சிடம் விழுந்துள்ளது.
ஏற்கெனவே சாட், ஐவரிக்கோஸ்ற், செனகல் போன்ற நாடுகளில் பிரான்சிய படைகள் சில நூற்றுக்கணக்கில் நிலை கொண்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
மேலும் பிரான்ஸ் ஏற்கெனவே மாலியை தனது காலனித்துவ நாடாக வைத்திருந்த அனுபவங்களை கொண்டுள்ளது.
இருந்தாலும் மாலிக்கு போகும் பிரான்சிய படைகள் அங்குள்ள நிலமையை இலகுவாக சமாளிக்க முடியும் என்று கூற முடியாது, நீண்ட நாட்கள் நிலை கொள்ள நேரிடும் என்றே கருதப்படுகிறது.
மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவப் பிரிவொன்று மாலி புறப்பட்டுள்ளது, தீவிரவாதிகளுக்கு எதிராக மாலியின் இராணுவம் போராடக் கூடிய பயிற்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவுள்ளது.
மாலிக்கு புறப்படும் பிரான்சிய இராணுவம் அயலில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கும் உதவி வழங்கும் என்று கூறப்படுகிறது.
பிரான்சிற்கு அனைத்து நாடுகளும் உதவி வழங்க வேண்டுமென அமெரிக்கா கேட்டுள்ளது.

0 கருத்துகள்: