தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.12.12

சல்மான் ருஷ்டியின் நாவல் சினிமாவானது: காங்கிரஸ் எதிர்ப்பு


நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியின் நாவலான தி மிட்நைட் சில்ட்ரன்ஸ் ஆங்கிலத்தில் படமாக எடுக்கப்பட்டுள்ளது.ஸ்ரேயா சரண், சித்தார்த், அனுபம் கேர், சபானா ஆஸ்மி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை தீபா மேத்தா இயக்கியுள்ளார். இந்தியாவில் இப்படத்தைத் திரையிட காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியை மோசமானவராகக் காட்டியுள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும்  இந்திய

வரைபடத்தில் காஷ்மீர் இல்லாமல் இத்திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் கனடாவின் டொரண்டோ திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களை காயப்படுத்தியுள்ள இந்தப் படத்தை இந்தியாவில் வெளியிடத்  தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: