தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.12.12

பிலிப்பைன்ஸை தாக்கிய மிக மோசமான புயலாக போபா பதிவு : பலி எண்ணிக்கை 1000


டிசம்பர் 4 ஆம் திகதி மின்டனாவோ தீவு உட்பட தெற் கு பிலிப்பைன்ஸைத் தாக்கிய தைஃபூன் போப்பா (Bo pha) எனும் புயலே இதுவரை பிலிப்பைன்ஸைத் தாக் கிய தைஃபூன்களில் மிகத் தீவிரமானதும் பாரிய உயி ரிழப்புக்கைளை ஏற்படுத்திய புயலாகவும் பதிவு செ ய்யப்பட்டுள்ளது.மேலும் Category 5 வகையைச் சேர் ந்த சூப்பர் தைஃபூனாக இது இனங்காணப் பட்டுள்ள துடன் புயல் வீசிய அதிகபட்ச வேகம் 260Km/h ஆகவு ம் பதியப் பட்டுள்ளது.தற்போது போப்பா தைஃபூனி
னால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கள் 1000 ஐ தாண்டி சென்று கொண்டிருப்பதுட ன் 850 பேரைக் காணவில்லை எனவும் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரி க்கலாம் எனவும் சிவில் பாதுகாப்பு பொறுப்பாளர் பெனிட்டோ ராமொஷ் ஊடக ங்களுக்குக் கூறியுள்ளார். இத் தைஃபூனினால் அதிகம் பாதிக்கப் பட்ட பிரதேச மாக பிலிப்பைன்ஸின் தெற்கே உள்ள மின்டனாவோ எனும் தீவு விளங்குகி ன்றது. காணாமர் போனவர்களில் அதிகமானோர் புயல் தாக்க முன்னர் மின்டா னாவோவில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களாகும்.

ராமொஷ் AFP இற்குப் பேட்டியளிக்கையில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் நேற்றைய தினம் உடைந்த கட்டடங்கள் மற்றும் வீடுகளுக்கு அடியில் புதையுண்டு இருந்த அதிகளவு பிணங்கள் மீட்கப் பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். உயிரிழப்புக்கள் குறித்து பிலிப்பைன்ஸின் தேசிய அனர்த்த நிவாரண அமைப்பு தகவல் அளிக்கையில் 1020 பேர் இறந்துள்ளமை உறுதி எனக் கூறியுள்ளது.

இப்புயல் காரணமாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் நகரக் கட்டமைப்புக்கள் குலைக்கப்பட்டும் பல மில்லியன் டாலர் பெறுமதியான சொத்துக்கள் நாசமடைந்தும் உள்ளன. அவசர தடுப்பு முகாம்களில் 27 000 பேர் வரை தங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

0 கருத்துகள்: