தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.12.12

நாஞ்சில் சம்பத் இனி அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர்!


கருத்து வேறுபாடு காரணமாக மதிமுகவிலிருந்து விலகியிருந்த மதிமுகவின் கொள்கைபரப்பு செய லாளர் நாஞ்சில் சம்பத் அதிரடியாக அதிமுகவில் இணைந்துள்ளதுடன், அவருக்கு கட்சியின் கொள் கை பரப்பு துணை செயலாளர் பதவியை வழங்கியு ள்ளார் தமிழக முதல்வர்.கட்சிக்காக தான் மிகவும் உழைத்து எண்ணற்ற கழகக் கண்மணிகளை மதிமு கவில் இணைத்துள்ளேன்
என்று கூறிவந்த நாஞ்சில் சம்பத், மதிமுகவிலிருந்து தான்ஒருபோதும் விலகப் போவதில்லை என்றும், வேண்டுமானால் அவர்கள் தன்னை கட்சியில் இருந்து நீக்கி பார்க்கட்டும் என் றும் சவால் விட்டு இருந்தார்.

இந்நிலையில் மதிமுக கட்சி நிர்வாகம் நாஞ்சில் சம்பத்தை எந்த விதத்திலும் கண்டுகொள்ளாமல் இருந்தது. மேலும் கட்சியை விட்டு நாஞ்சில் சம்பத்தை நீக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தது. இந்த வேளையில்தான் அதிரடி முடிவை எடுத்து இருக்கிறார் நாஞ்சில் சம்பத். இன்று அதிமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை சந்தித்து, அதிமுகவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து உடனடியாக அதிமுகவின் கட்சி உறுப்பினராக இணைந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயாலாளர் பதவியை வழங்கிய தமிழக முதல்வர், கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துகள்: