தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.11.12

சீன 13 மாலுமிகளை கொலை செய்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு தூக்கு தண்டனை.


சரக்கு கப்பலை கடத்திச் சென்று, 13 சீன மாலுமிகளை கொலை செய்த வழக்கில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சீன கோர்ட் உத்தரவிட்டது.கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சீனாவின் மெக்கோங் நதியில் வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் 13 சீன மாலுமிகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சீன அரசு விசார‌ணை நடத்தியது. இதில் மியான்மர் நாட்டைச்சேர்ந்த போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருந்தது தெரியவந்து.


இதயைடுத்து 5 மியான்மர் நாட்டவர்கள் உள்‌பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சீன கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த நெளஹாம் என்ற போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 4 பேருக்கு தூக்கு தண்டனையும், 3 பேருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

0 கருத்துகள்: