தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.10.12

ஈத் பெருநாள் போர்நிறுத்தம் செய்ய சிரியா ஒப்புதல் பிராகிமி


முஸ்லிம்களின் புனித நாளான ஈத் பெருநாள் விடு முறையின்போது தற்காலிக போர்நிறுத்தம் செய்ய சிரிய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரபு நாடுகள் கழகத்தால் நியமிக்கப்ப ட்ட சர்வதேச மத்தியஸ்தர் பிராகிமி கூறியுள்ளார். நாளை துவங்கும் ஈத் பெருநாள் மூன்று அல்லது நான்கு நாட்கள் நீடிக்கலாம். புரட்சிப் படைகளின் சில பிரிவினரை தன் தொடர்பு கொண்டதாகவும், அவர்களும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதா கவும் பிராகிமி மேலும் கூறியுள்ளார். சிரியாவுக்கா ன ஐ.நாவுக்கான
இடைத்தரகராக செயற்படும் லத்கர் பஹிமி இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். வியாழக்கிழமை தொடக்கம் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு இவ்வாறு யுத்தநிறுத்தத்தை அமல்படுத்தப்படவுள்ளது.
எனினும், போர்நிறுத்தம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது பற்றி பிராகிமி உறுதிபட தெரிவிக்கவில்லை. அவர் பேசுகையில், ‘தனது போர்நிறுத்த ஒப்பந்தத்தை சிரிய அரசு இன்று அல்லது நாளை அறிவிக்கும். புரட்சிப்படைகளில் பெரும்பாலானவற்றை நாங்கள் தொடர்பு கொண்டோம். அவர்களும் தற்காலிக போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டனர்’ என்றார்.
சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 19 மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரால் இதுவரை 30,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்: