தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.10.12

அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான்கான் நடத்திய பேரணியில் பதட்டம்.


பாகிஸ்தானில் அத்துமீறி ஆளில்லாத விமானம் டிரோன்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, இம்ரான் கான் தலைமையில் அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினர்.தலிபான் போராளிகள் மிரட்டலை மீறி நடந்த இந்த பேரணியால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அபோதாபாத்தில் பதுங்கி இருந்த அல் கய்தா  போராளிகள் தலைவர் ஒசாமா

பின்லேடனை அமெரிக்க கப்பல் படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும், ஆளில்லாத உளவு விமானம் டிரோன்கள் மூலம், பாகிஸ்தான் அனுமதி இன்றி தொடர்ந்து பல இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. போராளிகளின் பதுங்கு இடங்கள் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்று அமெரிக்கா கூறினாலும், இந்த தாக்குதலில் அப்பாவி மக்களும் ராணுவ வீரர்களும் பலியாகி வருகின்றனர்.
இதற்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். பாகிஸ்தான் இறையாண்மையை மதிக்காமல், அத்துமீறி அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்துவதை கண்டித்து பேரணி நடத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கு உள்ளூரில் உள்ள தலிபான் போராளிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரணி நடத்தினால் தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.

பதற்றமான சூழ்நிலையில், தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணிவகுக்க இம்ரான் கான் தலைமையில் நேற்று பிரமாண்ட பேரணி திட்டமிட்டபடி நடந்தது. பல கிராமங்களில் உள்ள மக்கள் ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. எனினும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் பேரணி அமைதியாக நடந்தது.

0 கருத்துகள்: