இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி மற்றும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஓமன் நாட்டு அரசு நீக்கியுள்ளது.ஒடிசா, திரிபுரா மற்றும் மேகாலய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியதை விலங்குகள் நலத்துக்கான உலக அமைப்பு உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி மற்றும் முட்டைகளுக்கு ஓமன் நாடு தடை விதித்தது.அந்நாட்டு கால்நடை அதிகாரிகள்
அளித்தபரிந்துரையின்பேரில், இப்போது கோழி இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, இந்திய ஏற்றுமதி நிறுவனத்தைச் சேர்ந்த பிரஷாந்த் தேசாய் கூறுகையில், "ஓமனில் தடை நீக்கப்பட்டது மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான கோழிகள் கைவசம் உள்ளன. ஓமன் நாட்டுக்கு விரைவில் கோழிகள் ஏற்றுமதி செய்யப்படும்' என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக