அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் ஒரு போராளியை கொல்வதற்கு 49 பொதுமக்கள் பலி யெடுக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள் ளன.பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தான் மற்றும் எல்லைப் பகுதிகளிலும் போராளிகளைக் குறி வை த்து அமெரிக்கா நடத்தும் இவ்வாறான தாக்குதல்க ளிலேயே பொதுமக்கள் கொல்லப்படுவதாக முறை ப்பாடு எழுந்துள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோ ர்ட் மற்றும் நியூயோர்க் பல்கலைக் கழகங்கள் சமீப த்தில் நிகழ்த்திய
கூட்டு ஆய்வொன்றின் படி, பாகி ஸ்தானில் நிகழ்த்தப்படும்
ஆளில்லா விமான தாக்குதல்களில் ஆண்கள், பெ ண்கள், மற்றும் குழந்தைகள் எனஅனைவரும் பாகுபாடில்லாமல் போராளி களாகக் கருதப்பட்டு சிறிதும் இரக்கமின்றி அவர்கள் மீதும் குண்டுத் தாக்குத ல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சில பகுதிகளில் 24 மணிநேரமும் குண்டுத்தாக்குதல் தொடர்கிறது.கூட்டு ஆய்வொன்றின் படி, பாகி ஸ்தானில் நிகழ்த்தப்படும்
இதைவிட இந்த ஆளில்லா டிரோன் ரக விமானங்கள் உபயோகிக்கும் 'டபிள் டப்' (double-tap) எனப்படும் இன்னொரு வகைத் தாக்குதல் உத்தி இதைவிடக் கொடூரமானது. இது என்னவென்றால் முதலில் ஒரு ஏவுகணை மூலம் கட்டடம் தகர்க்கப்பட்டு பின்னர் அதில் சிக்கியவர்களை மீட்புப் பணியினர் வந்து காப்பாற்றும் போது அடுத்த ஏவுகணையை செலுத்தி அனைவரையும் கொல்லுதலே இந்த double-tap தாக்குதல் ஆகும். இது முதல் தாக்குதல் நிகழ்ந்து 6 மணித்தியாலம் கழித்து மீட்புப் பணியின் போது நிகழ்த்திய 2 ஆவது தாக்குதலுக்கு சாட்சியம் உள்ளது.
இந்த டிரோன் விமானத்தின் எதிர்பாராத தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தானில் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. சிறுவர்களைப் பாடசாலக்கு அனுப்பவும் வெளியிடங்களில் நடமாடித் திரியவும் மட்டுமல்லாது வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடப்பதற்கும் வழியில்லாமல் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் அவலத்தை சந்தித்து வருவதாக அதிருப்தி எழுந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக