தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.9.12

ஐ.நாவின் தோல்வியை காண்பிப்பதாக காஷ்மீர் உள்ளது : ஐ.நாவில் சர்தாரி உரை


காஷ்மீர் ஐ.நாவின் தோல்வியை காண்பிப்பதாகவே இன்னமும் உள்ளது என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.ஐ.நாவின் பொதுச்ச பை கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். ஜம்மு, காஷ்மீர் பிரச்சினை குறித்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் இன்னமும் நிலுவையில் உள்ளன. ஐ.நாவினால் தீர்க்கப்பட முடி யாத பிரச்சினையாகவே காஷ்மீர் இன்னமும் உள் ளது. எனினும்
அங்குள்ள மக்களின் உரிமைகளுக்காக நாம் தொடர்ந்து ஆதர வளிப்போம். இது ஐ.நாவின் சக்தியை வெளிப்படுத்தவில்லை. மாறாக ஐ.நா வின் தோல்வியையே காண்பிக்கிறது.
இந்தியாவுடனான எங்களது உறவு மேம்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களும், சமீப காலமாக பல தடவை சந்தித்து பேசியுள்ளோம். கடந்த மாதம் தெஹ்ரானில் கூட இந்திய பிரதமரை சந்தித்து பேசினேன் என்றார். கடந்த ஜூலை மாதம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்தியாவும் - பாகிஸ்தானும் தமக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய விடயம் அது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: