தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.9.12

கூகுள், யூடியூப்புக்கு தொடரும் ' அப்பு அடி


அண்மையில் இஸ்லாமியர்களு க்கு எதிரான அமெரி க்க திரைப்ப டம் பலபேரின் அறிவுறுத்தலுக்கு பின்ன ரும் யூடியூப் தளத்திலிரு ந்து நீக்கப்படாதிருந்தமை க்கு ம த்திய கிழக்கு நாட்டவர்களிடம் நன்றாக வாங் கிக்கட்டிக்கொண் டது யூடியூப் மற்றும் அதன் உரி மையாளரான கூகுள் நிறுவனம் .தற்போது,  ஒரு படி மேல் போய் கூகுள் நிறுவன தலைவரை கைது செய்யும் படி பிரேசில் நீதிமன்றம்

உத்தரவிட்டுள்ள து. ஆனால் இது இஸ்லாமியர்களுக் கு எதிரான திரைப்பட விவகாரம் அல்ல.  பிரேசிலின்  தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக அங்கு போட்டியிடும் மூத்த வேட் பாளர் ஒருவரைத் தாக்கி YouTube இல் வெளியான வீடியோக்களை நீக்கத் தவ றியதாலேயே இந்தக் கைது உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

எனினும் இக்கைது உத்தரவுக்குப் பதில் அளித்த கூகிளின் பிரேசில் நிறுவன தலைவர், குறித்த நீதிமன்ற தீர்ப்பை தமது கூகிள் நிறுவனம் நிராகரிப்பதாகவும் ஏற்கனவே சர்ச்சைக்குரிய இரு வீடியோக்களை தடை செய்துள்ளதாகவும் கூறியிருந்தது. மேலும் பிரேசிலில் கூகிள் மற்றும் YouTube தளங்கள் 24 மணித்தியாலத்துக்கு ஏற்கனவே முடக்கப் பட்டிருந்தது.

இப்படி பிரேசில் கூகுள்  தலைவரை கைது செய்யும் படி தமக்கு எந்த கட்டளைகளும் கொடுக்கப் படவில்லை என பிரேசில் காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.  மேலும் சாவோ பௌலோவிலிருந்து  கூகிள் நிறுவனம் அனுப்பிய மின் அஞ்சலில்

'கூகிள் பிரேசில் நீதிபதியால் பிறப்பிக்கப் பட்ட உத்தரவின் படி குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய வீடியோக்களை நீக்கம் செய்ய முடியும். எனினும் தனது சொந்த அடித்தளத்தில் இருந்து நோக்கும் போது YouTube இல் பதிவு செய்யப் பட்ட குறித்த வீடியோக்களுக்கு நாம் பொறுப்பேற்க முடியாது.' என கூறப்பட்டுள்ளது. 

0 கருத்துகள்: