தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.9.12

முஹம்மது நபியை அவமதிக்கும் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


இறைதூதர்முஹம்மதுநபி (ஸல்)அவர்களையும் இஸ்லாம்மதத்தையும் அவமதிக்கும்வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்க எதிர்ப்புதெரிவித்து கொழும்பில் இன்று புதன் கிழ மைபாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஸ்ரீலங்கா தவ்ஹீத்ஜமாத் ஏற்பாடு செய்திருந்த இவ்வார்ப்பா ட்டத்தில்நூற்றுக்கணக்கானோர்கலந்துகொண்டிருந்தனர்.
இஸ்லாத்துக்கு எதி ராகத் தயாரிக்கப்பட்டதிரைப்படத்தைஅமெரிக்கா உடனடியாக தடை செய்ய வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.



கொழும்பு மாளிகாவத்தையிலிருந்து ஊர்வலமாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடலூடாக அமெரிக்கத் தூதரகத்தை அடைய முற்பட்டனர். எனினும் அவர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

(படங்கள்: எஸ்.எம்.சுரேந்திரன்) நன்றி: வீரகேசரி

0 கருத்துகள்: