தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.8.12

கருணாநிதி, இரா.சம்பந்தன் ஆகியோரின் கொடும்பாவிகள் கொழும்பில் எரிப்பு


சென்னையில் இன்று நடைபெற்ற டெசோ மாநாட்டு க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் இந்திய தூதுவர் இல்லத்திற்குஎதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், திமுக தலைவர் கருணாநிதி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோ ரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டுள்ளன. தேசப்பற் றுள்ள தேசிய இயக்கம் உள்ளிட்ட தேசிய அமைப்புக் களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பா ட்டத்தில்,  தேசப்பற்றுள்ள தேசிய
இயக்கத்தின் த லைவர் குணதாச அமரசேகர
கலந்து கொண்டு உரையாற்றினார்.

இலங்கை ஒரு இறைமை கொண்ட நாடு. அதன் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என இந்தியாவை கேட்டுக்கொள்கிறோம். இந்தியாவில் டெசோ மாநாடு போன்ற மாநாடுகளை இனி நடத்த அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். உள்விவகாரங்களில் நீங்கள் தலையிட இலங்கை ஒன்றும் இந்தியாவின் மாநிலமல்ல. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, தமிழர்களுக்கு ஈழத்தை அமைத்துக்கொடுக்க மேற்குலக நாடுகள் வழிவகுத்து கொடுக்க முனைகின்றன. எனவே இவ்விவகாரத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவதானமாக செயற்பட வேண்டும் என குணதாச இப்பேரணியின் போது உரையாற்றினார்.

உருவ பொம்மைகள் எரிக்கப்பட்ட போது 'புலி', 'வெட்கமில்லையா' என்ற கோஷங்களுடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்திய பதாகைகளில், 'இரத்தவெறி கொண்ட இரட்டை சகோதரர்கள் கருணாநிதியும், சம்பந்தனும்', 'இந்திய அரசை கண்டிக்கிறோம்', 'ஈழக்கோரிக்கை மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கான கோரிக்கை' 'ஈழம் என கோருவதை நிறுத்துங்கள்' போன்ற வசனங்கள் எழுதப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில், இலங்கைப் போற்குற்றவாளிகள்  மீது ஐநா நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழர் பகுதியிலிருந்து இலங்கை இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்ற தீர்மானங்கள் உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்: