தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.8.12

சீனாவில் பயங்கரம் ரசாயன லாரி மீது பஸ் மோதி 36 பயணிகள் உடல் கருகி பலி


சீனாவில் மீத்தேன் ரசாயனம் ஏற்றி சென்ற டேங்கர் லாரி மீது இன்று காலை பஸ் மோதியதில் 36 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 3 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர். சீனாவில் சாலை விதிமுறைகள் கடுமையாக உள்ளன.எனினும், விபத்துகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. அதிவேகமாக செல்லும் கார்கள் முக்கிய சாலைகளில்

ஒன்றன் மீது ஒன்று மோதிக் கொள்ளும் விபத்துகள் நடந்தன. விபத்துகளை தடுக்க அதிகாரிகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள யான் தேசிய எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று காலை மீத்தேன் டேங்கர் லாரி மீது பஸ் பயங்கரமாக மோதியது. இதில் 2 வாகனங்களும் தீப்பிடித்து மளமளவென எரிந்தன. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் 36 பேர் வெளியில் தப்ப முடியாமல் உள்ளே சிக்கி கொண்டனர்.
தீயில் கருகி 36 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பயணிகள் மட்டும் பஸ் கம்பி, கண்ணாடிகளை உடைத்து கொண்டு வெளியில் வந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: