தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.8.12

பின்லேடன் வேட்டை பற்றிய புதிய புத்தகம், செப்டெம்பர் 11 நினைவு தினத்தில் வெளியீடு


அல்-கைதா இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசா மா பின்லேடன் பாகிஸ்தானில் எவ்வாறு கொல்ல ப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் அடங்கிய புத்த கம் 'No Easy Day:The Firsthand Account of the Mission that Killed Osama bin Laden' எனும் தலைப்பில் வெளியிட ப்படவுள்ளது.இவ்வருடம் செப்டம்பர் 11 இல் நியூ யோர்க் தாக்குதலின் நினைவு நாளில் வெளியிடப் படவுள்ள இப்புத்தகத்தில் கடந்த 2011 மே 2ம் திகதி
அமெரிக்க சிறப்பு கடற்படை குழுவினரால் ஒசாமா பின்லாடன் அபோத்பாத் மாடிவீட்டில் வைத்து எவ்வாறு சுற்றி வளைக்கப் பட்டு கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் அடங்கியுள்ளன.

இப்புத்தகத்தை வெளியிடும் அமெரிக்க அச்சகரான டுத்தொன் கூறுகையில் அமெரிக்காவின் கடல், வான் மற்றும் தரை ஆகிய வழிகளில் தாக்குதல் நிகழ்த்தக் கூடிய Navy SEAL எனும் பிரிவைச்சேர்ந்த இராணுவ உறுப்பினர் ஒருவரே மார்க் ஓவென் எனும் புனைப் பெயரில் இப்புத்தகத்தை கெவின் மௌரெர் எனும் பத்திரிகை ஆசிரியருடன் இணைந்து எழுதியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதேவேளை பெண்டகனில் இருந்து செயற்படும் அமெரிக்காவின் இராணுவத் தலைமையகம் பின்லேடன் ஆப்பரேஷனை நிகழ்த்திய்  அமெரிக்க இராணுவத்தை சேர்ந்தவர் எவரேனும் இப் புத்தகத்துக்குத் தகவல் வழங்கியிருந்தது கண்டு பிடிக்கப் பட்டால் அவர் உடனடியாகப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப் படுவார்கள் என்று கூறியுள்ளது.

ஒபாமாவின் நிர்வாகம் பின்லேடன் ரெய்டு தொடர்பான வகைப் படுத்தப்பட்ட ஆவணங்களைக் கசிய விட்டுள்ளது என்ற சர்ச்சைக்குள் சிக்கியிருக்கும் நேரத்தில் இப்புத்தகத்தின் வெளியீடு நிகழ்வது குறிப்பிடத்தக்கது.
உலகை அதிர வைத்த தற்கொலை விமானத் தாக்குதலான நியூயோர்க்கின் உலக வர்த்தக மையக் கட்டட தகர்ப்பின் திட்டமிடல் சூத்திரதாரியான ஒசாமா பின்லாடனை கண்டுபிடிப்பதற்காக அமெரிக்கா தசாப்தகாலத்திற்கு மேலாக ஆப்கான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: