தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.7.12

தமிழக காவற்துறை வலைத்தளம் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல்


தமிழக காவல்துறையின் இணையத்தளங் கள் சில, ஹேக்கிங் செய்யப்பட்டு, இரகசிய தகவ்லகள் பல திருடப்படுவதாக சமீபத்தில் தகவல் வெளிவந்திருந்தது.இது தொடர்பில் ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி வரதராஜன் இவ்வாறு கூடுதல் தகவல்கள் தருகிறார்.தமிழக் காவல்துறைக்கு ஒரு வ லைத்தளம் உண்டு. இந்த வலைத்தளம் பொ துமக்கள் தங்கள் புகாரை பதிவு
செய்வதற் காக மட்டும்தான். பொதுமக்கள்
தங்கள் புகாரை இந்த வலைதளத்தில் பதிவு செய்தால், அந்த வலைதளத்திலேயே காவல்துறை சார்பில் பதிலும் அளிக்கப் படும். இதை சுமார் 15 இளைஞர்கள் தெரிந்து கொண்டு, ரகசியமாகத் திருடி பேஸ்புக்கில் போட்டிருக்கிறார்கள். இந்த இளைஞர்கள் கணினி விஞ்ஞானத்தை கரைத்து குடித்தவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் இந்த தளத்தில் ஊடுருவி காவல்துறை தகவல்களை ரகசியமாகத் திருடி இருக்கிறார்கள். மேலும் காவல்துறை வலைதளத்தின் கடவுச் சொல்லையும் கூட கண்டுபிடித்திருப்பார்கள். வெளிநாடுகளில் தணிக்கை முறை உண்டு. ஆனால் நம்நாட்டில் வலைதள தணிக்கை முறை இல்லாததும் இந்த ரகசியத் திருட்டுக்கு ஒரு காரணம்.

பொதுமக்கள் தங்கள் தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்று தெரிந்து காவல்துறையில் புகார் கொடுக்க மட்டுமல்லாது, காவல்துறை மீது நம்பிக்கை குறையவும் இந்த சம்பவம் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பது உண்மை. மேலும் இந்த காவல்துறை வலைதளைப் பிரிவு சைபர் க்ரைம் பிரான்ச் கட்டுப்பாட்டில் வருகிறது. அங்குள்ள பணியாளர்கள் கணினி தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இல்லாமையும் காவற்துறை தகவல்கள் திருடப்பட்டதற்கு ஒரு காரணம்.

கணினி நுட்பம் தெரிந்த இளைஞர்களை சைபர் க்ரைம் பிரான்ச் பணியில் அமர்த்த வேண்டும். அதன் மூலம் நமது காவல்துறை வலைதளத்தை எவரும் ஊடுருவமுடியாதபடி வலுப்படுத்த வேண்டும். அப்போதுதான், நமது காவல்துறைத் தகவல்கள் திருடப்படாமல் பாதுகாக்க முடியும். இப்போதே அதை செய்தால்தான் மேலும் பல அசம்பாவிதங்கள் நேராமல் தடுக்க முடியும். இந்த தகவல் திருட்டின் மூலம், பொதுமக்கள் பலவிதத்திலும் பாதிக்கப் படும் அபாயம் இருப்பதால், உடனடியாக கணினி தொழில் நுட்பம் தெரிந்த இளைஞர்களை சைபர் க்ரைம் பிரான்ச் பணிக்கு அமர்த்த வேண்டும் என்கிறார்.

0 கருத்துகள்: