தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.7.12

துணை ஜனாதிபதி தேர்தல்: அன்சாரிக்கு எதிராக ஜஸ்வந்த் சிங்கை நிறுத்த பா.ஜ.க முடிவு?

துணை ஜ்னாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் ஹமீத் அன்சாரிக்கு எதிராக, பாஜக கூட்டணி சார்பில் ஜஸ்வந்த் சிங் நிறு த்தப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கி ன்றன.இது குறித்து இன்று நடைபெற உள்ள இன்று நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் தெரியவரும். துணை ஜ்னாதிபதி தேர்த லில்,காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக தற்
போதைய துணை ஜனாதிபதியான ஹமீத் அன்சாரியையே மீண்டும் நிறுத்து வது என அண்மையில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அன்சாரிக்கு சமாஜவாதி,பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அவருக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பா.ஜனதாவின் உயர்நிலைத் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது.அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, கட்சியின் அகில இந்தியத் தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு எதிராக பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஒருவரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. எனினும் இது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்து வேட்பாளரை அறிவிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

துணை ஜ்னாதிபதி வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சரத் யாதவ் நிறுத்தப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், வலுவான ஆளும் கூட்டணிக்கு எதிராகப் போட்டியிட விரும்பவில்லை என அவர் தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து ஏற்கெனவே துணை ஜ்னாதிபதி பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த பாஜகவின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் பெயரை அக்கட்சி பரிசீலித்து வருகிறது.

இதற்கிடையே 2007-ம் ஆண்டு ஹமீத் அன்சாரிக்கு எதிராக போட்டியிட்ட நஜ்மா ஹெப்துல்லாவும் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. யாருக்கு வாய்ப்பு என்பது இன்று நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் தெரியவரும்.

முன்னதாக ஹமீது அன்சாரிக்கு ஆதரவு தருமாறு பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த கோரிக்கையை பாஜக நிராகரித்துவிட்டது. 

இதற்கிடையே மேற்கு வங்க முன்னாள் ஆளுனர் கோபால கிருஷ்ண காந்தியை துணை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தலாம் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு கோபால கிருஷ்ண காந்தி மறுப்பு தெரிவித்துவிட்டார்.
நன்றி:தேடிப்பார்

0 கருத்துகள்: