மணிப்பூர் மாணவ மாணவிகள் அநாகரீகமாக ஆடை அணிவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அங்குள்ள ஆறு மாணவச் சங்கங்கள் அறிவித்துள்ளன.அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மாணவிகள் மணிப்பூரின் பாரம்பரிய ஆடையான பாணிக் வகை (
கணுக்கால் வரை மறைக்கக் கூடிய ) ஆடைகளை அணிய வேண்டும் என்றும், எந்த மாணவ மாணவியரும் முழங்காலுக்கு மேலான ஆடைகளை எக்காரணம் கொண்டும் அணியக் கூடாது என்றும் தடை விதித்துள்ளனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் அலைபேசிகள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அந்த சங்கங்கள்
தெளிவுபடுத்தியுள்ளன. ஆல் மணிப்பூர் ஸ்டூடன்ட் யூனியன், டெமாக்ரடிக் ஸ்டூடன்ட்ஸ் அலையன்ஸ் ஆப் மணிப்பூர், மணிப்பூர் ஸ்டூடன்ட்ஸ் பெடரேசன் உள்ளிட்ட அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

போதை தரும் அனைத்து பொருட்களும் கல்வி வளாகங்களில் தடை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக