தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.6.12

நிதி நெருக்கடியின் எதிரொலி: நோபல் பரிசுத் தொகை குறைகிறது


இலக்கியம், பொருளாதாரம், அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.நோபல் பரிசுக்கான பரிசு தொகையாக ஒவ்வொரு துறைக்கும் ரூ.6 கோடி வழங்கப்படுகிறது.இதற்காக நோபல் பரிசு அமைப்பு நோர்வேயை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. அது பெறும் நன்கொடைகளை டெபாசிட் செய்து வரும் வட்டியில் இருந்து இந்த பரிசு தொகை
வழங்கப்படுகிறது.இப்போது ஐரோப்பிய நாடுகளில்
நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக முதலீடுகளில் வட்டி வருமானம் குறைந்து விட்டது.
இதையடுத்து நோபல் பரிசுக்கான தொகையை குறைப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக நோபல் பவுண்டேஷன் தலைமை செயல் அதிகாரி லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: