தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.6.12

கண்டனங்கள் எதிரொலி. கலாம் என்றால் கலகம் என்று கூறிய கருணாநிதி திடீர் 'பல்டி'


ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் போட்டியிடுவது பற்றி, கடந்த வாரம் கருத்து கூறிய தி.மு.க தலைவர் கருணாநிதி, 'கலாம் என்றால் கலகம் விளைவிப்ப வர்’ எனக் கூறியிருந்தார்.கருணாநிதியின் இக்கருத்து கடும் விமர்சனத்துக்கு ஆளானது. பல்வேறு அரசியல் தலைவர் களும், முஸ்லிம் அமைப்புகளும் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அப்துல்கலாமை தான் எப் போதும் மதிப்பதாகக் கருணாநிதி இன்று கூறியுள்ளார்.இது பற்றி பேசிய கருணாநிதி,
‘இந்தப் பிரச்சினையை திசைதிருப்ப சிலர் முயல்கின்றனர். கலாமை நான் எவ்வளவு மதிக்கிறேன் என்பது, அவருக்கே தெரியும். நான் எப்போதும் அவரை மதிப்பேன்’ என்றார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி சென்னை வர உள்ளது பற்றி பேசும்போது, ‘ஜனாதிபதி தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக பிரணாப் 30-ம் தேதி சென்னை வருகிறார். அவர் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளார். சென்னை வரும் பிரணாப்புக்கு சிறப்பான வரவேற்பளிக்க ஏர்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரணாப்பின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ என்றார் கருணாநிதி.

இனப் படுகொலைக்கு துணை போன பிரணாபின் சென்னை வருகை தமிழர்கள் பலரையும் எரிச்சல் மூட்டயுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. 

0 கருத்துகள்: