தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.6.12

சுவிஸ் வங்கிகளில் வெளிநாடுகள் வைப்பிலிட்டுள்ள பணத்தொகை : இந்தியாவுக்கு 55 வது இடம்!


சுவிற்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்கள் வைப் பிலிட்டுள்ள மொத்த பணம் ரூ 12,740 கோடியாக உள் ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் சுவிற்சர் லாந்து தேசிய வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிக் கையின் படி, சுவிஸ் வங்கிகளில் அதிக தொகை வை ப்பிலிட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 55 வது இடம் கிடைத்துள்ளது. சுவிஸ் வங்கிகளில் உ ள்ள மொத்த வெளிநாடுகளின் பணத்தொகையில் 0.14 % வீதம் இந்தியர்களுடையதாக உள்ளது. அதாவது 2011 இன்
இறுதியில்,வெளிநாட்டுப்பணமாக மொத்தம் 1.53 டிரில்லியன் சுவி ஸ் பிராங்குகள், சுவிஸ் வங்கிகளில் (ரூ 90 டிரில்லியன்) வைப்பிலிடப்பட்டுள்ளது. 
இதில் இந்தியர்கள் வைப்பிலிட்டுள்ள மொத்த பணத்தொகை 2.18 பில்லியன் சுவிஸ் பிராங்குகளாக (ரூ 12,700 கோடி) ஆக உள்ளது.
இங்கிலாந்து 20% வீதத்துடன் முதலிடத்திலும், அமெரிக்கா 18% வீதத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதையடுத்து மேற்கிந்தியா, ஜெர்ஸே, ஜேரனி, பஹாமாஸ், குவெர்ன்சேய், லுச்சேர்ம்பேர்க், பனாமா மற்றும் பிரான்ஸ், ஹாங்கான், கேய்மென் தீவு, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இத்தாலி, நெதர்லாந்து, ரஸ்யா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் என்பன அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

கடந்த ஐந்தாண்டுகளில் முதன்முறையாக இந்தியர்களின் வைப்புத்தொகை (ரூ 3,500 கோடியால்) உயர்வடைந்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது. எனினும் பிற நபர்களது பெயரில் இந்தியர்களும், பிறநாட்டவர்களும் வைப்பிலிட்டுள்ள தொகை எவ்வளவு என்பது பற்றிய விபரமேதும் இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: