தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.5.12

டுவிட்டர் இணையதளத்திற்கு பாகிஸ்தானில் தடை.


இஸ்லாத்தை அவமதிக்கும் விஷயங்களை அகற்ற மறுத்த காரணத்தால், டுவிட்டர் இணையத்தளத்தை தாம் தடை செய்வதாக பாகிஸ்தானில் உள்ள தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  முகமது நபியை உருவங்களின் மூலம் குறிப்பிடுவதை முஸ்லிம்களால் மத நிந்தனையாகக் கருதும் நிலையில், டுவிட்டரில் வந்த ஒரு கேள்வி,
அவருக்கு ஒரு உருவப்படத்தை ஃபேஸ்புக்கில் பரிந்துரைப்பதை போட்டியாக ஊக்குவித்திருந்தது.



அந்தப் போட்டி குறித்த கரிசனைகளை கவனத்தில் எடுக்க ஃபேஸ்புக் ஒப்புக்கொண்டிருந்ததாகவும், டுவிட்டர் அதற்கு உடன்படவில்லை என்றும் பாகிஸ்தானிய தொலைத்தொடர்புத்துறையின் தலைவரான முகமட் ஜசீன் கூறியிருந்தார்.
அந்த விடயங்கள் அகற்றப்படும் போது அந்த இணையதளத்துக்கான தடை நீக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
கடைசி செய்தி: டுவிட்டருக்கான தடை கட்டுபாடுகளுடன் நீக்கப்பட்டதாக பாக்கிஸ்தான் அறிவிப்பு

0 கருத்துகள்: