தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.5.12

நடுவானில் விமானிகளுடன் தகராறு செய்த பிரதமரின் மகன்


பாகிஸ்தானில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் உள்ள விமானிகளுடன் ரகளையில் ஈடுபட்டதாக, அந்நாட்டு பிரதமர் மகன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நேற்று லாகூர் நகரில் இருந்து கராச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.இதில் பயணிப்பதற்காக தனது பாதுகாவலருடன் வந்த பிரதமர் யுசுப் ராஸா கிலானியின் மகன் அலி மூசா, நடுவானில் பறந்து
கொண்டிருந்த போது, தனக்கு உயர்வகுப்பு சொகுசு கட்டண இருக்கையினையும், பாதுகாவலரு
க்கு வர்த்தகர்களுக்கான கட்டண வகுப்பு இருக்கையும் ஒதுக்கப்பட்டிருந்தை அறிந்து விமான விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களிட்ம் தகராறு செய்து விமானத்தை மீண்டும் லாகூருக்கு ‌செல்லுமாறு கூறி ரக‌ளையில் ஈடுபட்டார்.
உடன் சிலர் அவரை சமரசப்படுத்தினர். பின்னர் ஒரு வழியாக சமாதானம் அடைந்த அலி மூசா, கராச்சி விமானநிலையத்திற்கு விமானம் இறங்கியவுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் விமான நிலைய அதிகாரிகளை கலக்கமடைய செய்தது.

0 கருத்துகள்: