தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.5.12

பாப்ரி மஸ்ஜித் இடிப்பில் ஹிந்துத்துவா கூட்டுச்சதி: ஜூலை 25-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை துவக்கம்!


புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் ஜூலை 25-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. பாப்ரி மஸ்ஜித் இடிப்பின் பின்னணியில் பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே ஆகியோர் உள்பட 21 பேரின் சதித்திட்டம் குறித்து மறுவிசாரணைக் கோரும் சி.பி.ஐ மனுவின் மீது விசாரணை நடத்த நீதிபதிகள் ஹெச்.எல்.தத்தா, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய் டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டது.
முரளி மனோகர் ஜோஷி, சாத்வி ரிதாம்பரா, வினய் கத்தியார், அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா, உமாபாரதி, கல்யாண்சிங், சதீஷ் பிரதான், சி.ஆர்.பன்ஸால், கிரிராஜ் கிஷோர், வி.ஹெச்.டால்மியா, ஆர்.வி.வேதாந்தி, பரமஹம்ஸ் ராமசந்திரதாஸ், ஜகதீஷ் முனி மகராஜ், பி.எல்.ஷர்மா, நித்யா கோபால்தாஸ், தர்மதாஸ், சதீஷ் ஸாகர், மொரேஷ்வர் ஸாவெ ஆகிய ஹிந்துத்துவா தீவிரவாத தலைவர்கள் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஆனால், இவர்கள் மீதான குற்றங்களை அலகாபாத் உயர்நீதிமன்றம் விலக்கியது. இதனை எதிர்த்து சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனுவை தாக்கல் செய்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி வரலாற்றுச்சிறப்பு மிக்க முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமான பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது.
சங்க்பரிவார பயங்கரவாதிகள் முன்னரே திட்டமிட்டு இந்த அநீதித்தை அரங்கேற்றினர். சங்க்பரிவார தலைவர்களின் உணர்ச்சியைத் தூண்டும் உரைகள் கரசேவகர்களை மஸ்ஜிதை இடிப்பதற்கு தூண்டியதாக கூறிய உச்சநீதிமன்றம், மஸ்ஜிதை இடிப்படை தடுப்பதில் தோல்வியை தழுவிய அன்றைய உ.பி பா.ஜ.க முதல்வர் கல்யாண்சிங்கிற்கு ஒரு நாள் அடையாள சிறைத் தண்டனையை வழங்கியிருந்தது.
சி.பி.ஐ வழக்குரைஞரின் கருத்தை ஆராய்ந்த உச்சநீதிமன்ற டிவிசன் பெஞ்ச், ஜூலை 25-ஆம் தேதி விசாரணையை துவக்க உத்தரவிட்டது.
News@thoothu 

0 கருத்துகள்: