தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.4.12

இந்திய இளையஞர்களின் நம்பிக்கை நாயகன் அகிலேஷ். அமெரிக்க இந்தியர்கள் புகழாரம்.

எங்களை கவரும் தலைவராக உள்ளார்இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் என்று அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர்கள் தெரி வித்துள்ளனர்.அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர் கள் குழுவினர் சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந் தனர். அப்போது உத்தரப் பிரதேச முதல்வர் அகிலே ஷ் யாதவை சந்தித்து விவாதித்தனர். இதுபற்றி அந்த க் குழுவின் தலைவர் சோமர் செய்தியாளர்களுக்கு அ ளித்த பேட்டியின் போது அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.இந்திய இளைய
தலைமுறையினரின் நம்பி க்கை நாயகனாக உள்ளார் அகிலேஷ். நாட்டில் மாற் றத்தை உருவாக்க வேண்டும்,வளர்ச்சிப் பாதையில் நாட்டை இட்டுச் செல்ல வேண்டும் என்று விரும்பும் இந்திய இளைய தலைமுறையினருக்கு தலைமை ஏற்கும் வல்லமை அவருக்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அகிலேஷ் யாதவை லக்னோவில் சந்தித்தபோது எங்களை உற்சாகமாக வரவேற்றார். இளம் தலைவரான அவர் துடிப்புடன் செயல்படுகிறார். அமெரிக்க முதலீடுகளை உத்தரப் பிரதேசத்தை நோக்கி ஈர்க்க தனது தலைமையிலான அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் எங்களிடம் கேட்டது எங்களை கவரும் விதமாக இருந்தது. அவர் திறமை மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது என்று சோமர் கூறினார்.

0 கருத்துகள்: