சிரியாவில் இன்றுவியாழன் விடிந்தால் யுத்த நிறுத் தம் வந்துவிட வேண்டும் என்று ஐ.நாவின் முன்னாள் செயலர் கொபி அனான் தெரிவித்துள்ளார். ஏற்கென வே ஒப்புக் கொண்ட விதிகளுக்கு அமைய நேற்றே யு த்த நிறுத்தம் ஏற்பட்டிருக்க வேண்டும், ஆனால் நடை பெறவில்லை. இக்கணம் வரை சிரிய அதிபர் தொடர் படுகொலைகளை நடாத்தியபடியே இருக்கிறார். இது வே தற்போதைய மிகப்பெரிய துயரம் என்று ஐ.நா பா துகாப்பு சபைக்கு நேற்று கொபி அனான் கடிதம் எழுதி யிருந்தார். இருந்தாலும் இன்று
காலை கருத்துரைத்த அவர் இந்த நிமிடம்வரை யுத்த நிறுத்த ஒப்பந்தம் செத்துப் போய்விடவில்லை என்று நம்பிக்கை தெரிவித் தார்.
காலை கருத்துரைத்த அவர் இந்த நிமிடம்வரை யுத்த நிறுத்த ஒப்பந்தம் செத்துப் போய்விடவில்லை என்று நம்பிக்கை தெரிவித் தார்.
இருந்தாலும் இதுவரை சமாதானத்திற்கான சமிக்ஞைகள் எதையும் சிரிய அதிபர் வெளிப்படுத்தாத நிலையிலேயே விடிந்தால் சமாதானம் என்று அறிவித்துள்ளார் கொபி அனான். நாளை அதிகாலை சூரியனின் கிரகணங்கள் சிரிய மண்ணில் விழும்போது அங்கு வெடிக்கும் மரண வெடிகள் முற்றாக நின்றிருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மற்றய விவகாரங்கள் படிப்படியாக நடைபெறும். கொபி அனான் விரித்திருக்கும் வலையில் சிரிய அதிபர் விழுந்தால் அவருடைய குடும்ப அரசியல் கழுதைப் புலியிடம் அகப்பட்ட காட்டெருமையின் கதையாகும் என்பதைக் கண்டு ரசிக்க உலகம் தயாராகி வருகிறது.
இதை நன்கு உணர்நதுள்ள ரஸ்ய வெளிநாட்டு அமைச்சர் சேர்ஜி லாரோவ் கருத்துரைக்கும்போது, சிரியா முற்றான படை விலத்தலை செய்யாது என்றும், தனது யுத்த நிறுத்தத்தை ஒரு பகுதி மட்டும் செய்து காட்டும் என்று தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர் நாட்டில் இறங்கிய பின்னரே பூரண யுத்த நிறுத்தம் அமலுக்கு வரும் என்று சிரிய வெளிநாட்டு அமைச்சர் வலியட் அல் மவுலம் கூறினார். அதேவேளை சட்ட முரணான ஆயுதக்குழுக்களுக்கு இரகசியமான ஆயுதங்களை வழங்கி நாட்டுக்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறது துருக்கி என்று சிரியா குற்றம் சுமத்தியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக