தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.4.12

ஜப்பானில் புதிதாக 8 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு


ஜப்பானில் இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 8 லட்சம் இளைஞர்கள் வேலைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிதியாண்டின் முதல் வேலை நாளான திங்கள்கிழமை அவர்கள் தங்கள் வேலையைத் தொடங்கினர்.இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 80.5 சதவீதம் கல்லூரி மாணவர்கள் பல்வேறு நிறுவனங்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தங்கள் படிப்பை முடிக்கும் முன்னரே  தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது கடந்த ஆண்டை விட 3.1 சதவீதம் அதிகம் என்று ஜப்பான் வேலை வாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமியினால் இவாட்டா, மியாகி மற்றும் ஃபுகுஷிமா பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இந்த ஆண்டில் இவாட்டா பகுதிகளில் 92.5 சதவீதம் படிப்பை முடித்த இளைஞர்கள் வேலைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் மியாகி பகுதியில் 88.1 சதவீதம், ஃபுகுஷிமா பகுதியில் 88.7 சதவீதம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதல்நாளில் வேலைக்குச் சென்ற இளைஞர்களை நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர்.

0 கருத்துகள்: