ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தீர்மானித்தால், அது குறித்து அமெரிக்காவுக்கு தகவல் தெரிவிக்கப்படமாட்டாது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் கூட்டு படையதிகாரிகளின் பிரதானிகளின் தலைவர், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், தேசிய புலனாய்வு பணிப்பாளர், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இஸ்ரேலுக்கு
அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டனர். இவர்கள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் எஹுட் பராக்கை சந்தித்து பேசினர்.அப்போதே இஸ்ரேலிய அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்ததாக அமெரிக்க புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் தாக்குதல் நடத்தும் திட்டத்தை அமெரிக்கா தடுக்கலாம் என்ற கருதியே, முன் அறிவிப்பு எதுவும் வழங்கப்படமாட்டாது என இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் ஈரானிய அணுசக்தி திட்டங்களுக்கு தற்காலிக பின்னடைவு மாத்திரமே ஏற்படும் என இஸ்ரேலை சமாதானப்படுத்தும் முயற்சியல் அமெரிக்கா பல மாதங்களாக முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு அடுத்தவாரம் வாஷிங்டனுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக