தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.3.12

பாகிஸ்தானுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மிரட்ட்டல்.


பயங்கர அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதாக குற்றம் சுமத்தி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளன. உலக நாடுகள் ஈரானுடன் வர்த்தக தொடர்பு எதுவும் வைத்து கொள்ள கூடாது என்று வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், பாகிஸ்தான் எரிசக்தி தேவைக்காக ஈரானில் இருந்து குழாய் மூலம் கேஸ் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.  இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறுகையில், ஈரான் - பாக் கேஸ் பைப் லைன் திட்டத்தை தொடங்குவது, ஈரான் மீது அமெரிக்காவிதித்துள்ள தடைகளை மீறுவதாகும்.


அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்னவென்று பாகிஸ்தானுக்கே தெரியும். பொருளாதாரம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது பாகிஸ்தானுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்என்றார்.

0 கருத்துகள்: