தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.3.12

சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது!


நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் சிரியா விவகாரம் முக்கிய விசயமாக விவாதிக்கப்பட்டு வந்தநிலையில்நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற அமர்வின் போது சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானமொன்று சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரிய அரசுத் தலைவர் பஸார் அல் - அஸாத் தலைமையிலான சிரியா அரசாங்க நிர்வாகத்தின் கீழ் அதிகரித்துச் செல்லும் மனித உரிமை மீறல்களுக்கு
கண்டனம் தெரிவித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிரியாவுக்கு எதிரான இந்த கண்டன பிரேரணையை ஆதரித்து 37 நாடுகள் வாக்களித்ததுடன் ரஸ்யா, சீனா, கியூபா ஆகிய மூன்று நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.
இந்தியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட மூன்று நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
சிரியா தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அடுத்து சிறிலங்காவை நோக்கிய தீர்மானம் சபைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் மேலோங்கியுள்ளது.
இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இன்று மாலை உப மாநாடொன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் பங்கெடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா தொடர்பிலான பல விடயங்கள் சபையின் பங்கெடுத்திருந்த பலரது உரைகளில் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் சிறிலங்காவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உப மாநாடு காரசாரமான விவாதங்களுக்கும் கேள்விகளுக்கும் சிறிலங்கா பதில் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ka.

0 கருத்துகள்: