தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.3.12

இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது ஏ.எஸ்.கல்கட்


இலங்கைக்கு எதிராக வாக்களித்தமையினால் இந்தியாவுக்கு பா துகாப்பு ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புத்துறை பிரதானியொருவர் தெரிவித்துள்ளார். ஐ.நா ம னிதவுரிமை கூட்டத் தொடரில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போ து, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமையினால் இந்தி யாவின் பாதுகாப்பு சார்ந்த ரீதியில் அச்சறுத்தல்எற்பட்டடுள்ளது. 1987 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்ததிற் கு அமைய இலங்கைக்கு வந்த இந்தியாவின் சமாதான படையின் பிரதானியான லெப்டினன் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட் இந்தகருத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறான அச்சுறுத்தல்களை கட்டுப்படு த்துவதற்கு இந்தியா
முயற்சி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையில், சீனாவின் தலையீடுகளை உயரவிடாது தடுப்பதற்கு இலங்கையுடன் இணைந்து செயற்படவேண்டும் எனவும் இந்தியாவிற்கு அவர் கோரிக்கையினையும் விடுத்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் இந்தியாவின் பாதுகாப்பு ரீதியிலான செயற்பாடுகளில் நெருக்கடி நிலைமையை தோற்றுவிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் சகலவித பாதுகாப்புத்துறைசார் விடயங்களிலும், கடற்பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலும் இலங்கை முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பதாகவும் அவர் மேலும் தெவித்துள்ளார்.

0 கருத்துகள்: