தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.3.12

அர்ஜெண்டினா அரசு மருத்துவமனையில் இலவச வயாக்ரா மாத்திரகள் வினியோகம்.


அரசு தொழிற்சாலையில் தயாரித்து, அரசு ஆஸ்பத்திரிகள் மூலமாக இலவச வயாக்ரா மாத்திரைகளை வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு அல்ல.. அர்ஜென்டினாவில்.தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் உள்ள சான்டா ஃபி மாகாண நிர்வாகம்தான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதுபற்றி மாகாண சுகாதார
அமைச்சர் மிகல் கேபியல்லோ கூறியதாவது:

அர்ஜென்டினாவில் சிறுவர்கள் பலர் பல்மோனரி ஹைப்பர்டென்ஷன் நோயால் பாதிக்கப்படுகின்றனர். ரத்தக் குழாய்களில் அதிக ரத்த அழுத்தம் காரணமாக நுரையீரல் பாதிக்கப்படுகிறது. மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு சில்டனாஃபில் சிட்ரேட் மருந்து வழங்கப்படுகிறது. இந்த மருந்தை அரசு மருந்து தொழிற்சாலையிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சில்டனாஃபில் 20 மி.கி. கிராம் கொண்டதுதான் ஹைப்பர்டென்ஷனுக்கு மருந்தாக தரப்படுகிறது. அதே சில்டனாஃபில்லில் 25 முதல் 100 மி.கி. வரை உள்ளதுதான் வயாக்ரா, ரீவேஷியோ என்ற பெயரில் செக்ஸ் மாத்திரையாக தயாரிக்கப்பட்டு, ஆணுறுப்பு விறைப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு மருந்தாக அளிக்கப்படுகிறது.

மூலப்பொருள், தயாரிப்பு விதம் எல்லாம் ஒன்றுதான் என்பதால், குழந்தைகளுக்கான மருந்து தயாரிப்பதோடு சேர்த்து, செக்ஸ் வீரிய மாத்திரையையும் அரசு தொழிற்சாலையிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செக்ஸ் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்களுக்கு டாக்டர்கள் பரிந்துரையின் பேரில், அரசு ஆஸ்பத்திரிகள் மூலமாக இவை இலவசமாக வழங்கப்படும். சான்டா ஃபி மாகாண அரசு தொழிற்சாலையில் இருந்து வயாக்ரா மாத்திரையை பெற்றுக்கொள்ள மற்ற மாகாணங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.

0 கருத்துகள்: