உலகில் முதன் முறையாக அமெரிக்கர் அல்லாத ஒருவர் உலக வங்கி தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.உலக வங்கியின் தற்போதைய தலைவர் ராபர்ட் ஜோயலிக் வரும் ஜூன் மாதம் முதல் ஓய்வு பெறுகிறார்.இதனையடுத்து புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. உலக வங்கியின் தலைவராக இதுவரை அமெரிக்காவைச் சேர்ந்தவரே இருந்து
ள்ளார்.
ள்ளார்.
எனவே முதல் முறையாக அமெரிக்கர் அல்லாத ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என வளரும் நாடுகள் கோரி வருகின்றன. இதற்காக நைஜீரியாவின் நிதியமைச்சர் கோசி ஒகொஞ்ஜோ ஐவீலாவை களமிறக்க முடிவு செய்துள்ளன.
இந்நிலையில் வளரும் நாடுகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அமெரிக்காவின் டர்ட்மவுத் கல்லூரியின் தலைவரும், தென்கொரியாவைச் சேர்ந்தவருமான ஜிம் யாங் கிம் என்பவரை களம் இறக்க ஒபாமா திட்டமிட்டுள்ளார்.
இதன் மூலம் அமெரிக்கர் அல்லாத ஒருவர் உலக வங்கி தலைவராவது உறுதியாகி உள்ளது. உலக வங்கியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக, செயல் அதிகாரிகள் வாரிய கூட்டம் வரும் ஏப்ரல் 21ம் திகதி வாஷிங்டனில் நடைபெறுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக