ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடு க்க அமெரிக்க படையினர் முகாமிட்டுள்ளனர். அவர் களில் ஒரு வீரர் கடந்த வாரம் திடீரென காந்தகார் கி ராமத்துக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு ந டத்தினார். இதில் 9 குழந்தைகள் உள்பட 16 பேர் பரி தாபமாக இறந்தனர். இதற்கு ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய் கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கு மன் னிப்பு கேட்டுக் கொண்ட அமெரிக்க
அதிபர் ஒபாமா, துப்பாக்கிச் சூடு பற்றி விசா ரணைக்கு உத்தரவிட்டார்.
அதிபர் ஒபாமா, துப்பாக்கிச் சூடு பற்றி விசா ரணைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய வீரரின் பெயர் ராபர்ட் பேல்ஸ் (38) என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ஈராக் போரின் போது அனுப்பப்பட்ட அமெரிக்க படைகளில் ராபர்ட்டும் இடம்பெற்றிருந்தார். ஆப்கனுக்கு முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ளார். ஈராக் போரின் போது அவரது செயல்பாடுகள் பற்றி பல வெப்சைட்டுகள் செய்தி வெளியிட்டுள்ளன. ராபர்ட் துப்பாக்கிச் சூடு நடத்திய போது அதிக மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அத்துடன் குடும்ப பிரச்னை காரணமாகவும் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்திய வீரர் மீது ஆப்கனில் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என்று ஆப்கன் அதிபர் கர்சாய் வலியுறுத்தி வருகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக