தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.1.12

2011 இன் துணிச்சல் மிகுந்த சிறுவர்கள் விருதுகள் அறிவிப்பு : தமிழகத்திலிருந்து பரமேஸ்வரன் தெரிவு

2011ம் ஆண்டின் சிறுவர் சிறுமியர்களின் வீரதீர செய ல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இ தில் தமிழகத்தை சேர்ந்த பரமேஸ்வரன் உட்பட நாடு முழுவதும் 24 சிறுவர்கள் தெரிவாகியுள்ளனர். இதில் ஐவருக்கு மரணத்துக்கு பிறகு விருதுகள்அறிவிக்க ப்பட்டுள்ளன.தர்மபுரி மாவட்டத்தின் அரகாசன அள் ளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் 14 வ
யது மகன்
பரமேஸ்வரன். அக்கிராமத்தின் குளத்தில் விளையாடிக்கொண்டி ருந்த போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குள் வீழ்ந்து தத்தளித்து கொண்டிருந்த மூன்று சிறுமிகளை குளத்திலிருந்து மீட்டு உயிருடன் காப்பாற்றியுள்ளார் பரமேஸ்வரன். இத்தனைக்கும் அவருக்கு நீச்சல் தெரியாது. உயிருக்கு போராடிய அச்சிறுமிகளின் நிலை மாத்திரமே கண்முன் தெரிந்ததாக கூறியிருக்கிறார்.
தர்மபுரி மாவட்டத்தின் அரகாசன அள்ளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் 14 வயது மகன் பரமேஸ்வரன். அக்கிராமத்தின் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குள் வீழ்ந்து தத்தளித்து கொண்டிருந்த மூன்று சிறுமிகளை குளத்திலிருந்து மீட்டு உயிருடன் காப்பாற்றியுள்ளார் பரமேஸ்வரன். இத்தனைக்கும் அவருக்கு நீச்சல் தெரியாது. உயிருக்கு போராடிய அச்சிறுமிகளின் நிலை மாத்திரமே கண்முன் தெரிந்ததாக கூறியிருக்கிறார்.

 ஐந்து சிறுமியரில் இருவர் இறந்துவிட்ட போதும், மூவரை காப்பாற்றிய வீரச்செயலுக்காக தமிழகத்திலிருந்து அவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  திருடர்களை வீரத்துடன் எதிர்த்து நின்று கொள்ளையை தடுத்த  குஜராத் சிறுமிக்கு கீதா சோப்ரா விருதும், மழைக்காலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கின் போது தன்னை விட இளவயதுக்குழந்தைகளை வெள்ளத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியில் உயிர்நீத்த உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த கபில் சிங்குக்கு பாரத் விருதும், தீப்பிடித்த வேனிலிருந்து தனது பள்ளி நண்பர்களை காப்பாற்றிய உத்தர பிரதேச சிறுவர்க்கு, சஞ்சய் சோப்ரா விருதும் வழங்கப்படுகிறது.


'நமக்கு எதற்கு வேண்டாத வேலை, அதற்கெல்லாம் நேரமில்லை என இளைஞர்கள், பெரியவர்களே விட்டு ஒதுங்கும் இந்த காலத்தில், சிறிய வயதாக இருந்த போதும், ஆபத்தான நேரமொன்றில் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காது, தாமாக முன்வந்து மற்றவர்களை காப்பாற்றும் துணிச்சல், ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய பண்பு என்பதனை ஞாபகப்படுத்தும் விதத்தில் இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

டெல்லியில் எதிர்வரும் 26ம் திகதி குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் விழாவின் போது இவ்விருதுகளுக்கு தெரிவாகிய சிறுவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பரசளிக்கவுள்ளார்.

0 கருத்துகள்: