தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.12.11

அரபு லீக் கண்காணிப்பாளர் திங்கள்கிழமை சிரியா பயணம்

சிரியாவுக்கும், அரபுலீக்கிற்கும் இடையே செய்து கொள்ள ப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் வரும் திங்கள் 50 கண்காணி ப்பாளர் கொண்ட அரபுலீக் கண்காணிப்புப் பிரிவு சிரியாவிற் குள் நுழைகிறது. நேற்று சிரியாவில் தற்கொலைக் குண்டு வெடிப்பொன்று இடம் பெற்றது. இதை அல் குவைடா பயங் கரவாதிகளே செய்ததாக சிரிய அரசும் இல்லை சிரிய அரசே இதன் பின்னணியில் இருந்தது என்று
ஆர்பாட்டக்காரரும்தெரிவித்துள்ளனர். இத்தகைய குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைகளை கண்டறியும் பணியை கண்காணிப்பாளர் முடிவு செய்வார்கள். இவர்கள் பயணிப்பதற்கான விசேடமான பத்து கனரக வாகனங்கள் ஈராக்கில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. இரு தரப்பும் தாக்குதல்களை நடாத்த, கண்காணிப்புப் பிரிவு தடுப்பது போல பாவனை காட்டிக் கொண்டே குறிப்பெடுக்கும். இதற்கான விசேட கருவிகள், உளவுப்பிரிவு தொடர்பாடல்கள், சற்லைற் அவதானிப்புக்கள் யாவும் தொழிற்படும் என்பது கவனிக்கத்தக்கது. கண்காணிப்புக் குழுவை ஏமாற்றிவிட்டதாக இருதரப்பும் பெருமை பேச அவர்கள் துல்லியமாக தகவல் திரட்டுவார்கள். பின்னர் அவர்கள் வழங்கும் அறிக்கையை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட காய்கள் நகர்த்தப்படும். சிறீலங்காவில் போரின் போக்கில் முக்கிய பாத்திரம் வகித்த தொகுப்புரையை வழங்கியது இதுபோன்ற கண்காணிப்புக் குழு என்பது இன்னமும் தமிழ் ஊடகங்களில் சரிவர பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கண்காணிப்புக் குழு நுழையும் இடத்திற்கு ஒரு நாட்டின் நிலை போகுமானால் அந்த நாடு அழிவுப்பாதைக்குள் போகப்போகிறது என்பது அர்த்தமாகும். சிரியா நாடு சிறீலங்கா போல ஒரு குடும்ப ஆட்சியுள்ள போலி ஜனநாயக நாடாகவே இருக்கிறது. அந்த நாட்டில் சிறீலங்கா போலவே கண்காணிப்புக்குழு போயுள்ளது. ஐ.நாவின் அடுத்த கட்ட நகர்வுக்கான தகவல்களை இவர்களே வழங்குவர் என்பதும் கவனிக்கத்தக்கது.

0 கருத்துகள்: