தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.12.11

அமெரிக்கா தாக்குதல் நடத்தப்போவதாக பாக். விமானப்படை உஷார்


ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க கூட்டுப் படைகள் கடந்த மாதம் 26-ந்தேதி பாகிஸ்தானில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 24 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை தவறுதலாக நடந்துவி ட்ட தாக்குதல் என்று அமெரிக்கா கூறியது. ஆனால் திட்ட மிட்டே இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக பாகி ஸ்தான் கருதுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி உடல்நிலை
பாதிக்கப்பட்டுதுபாய்ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.இதை பயன்படுத்தி அமெரிக்கா மீண்டும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தலாம் என பாகிஸ்தான் கருதுகிறது. எனவே ஆப்கானிஸ்தான் எல்லை முழுவதும் விமானப் படைகளை குவித்து வருகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ டைரக்டர், ஜெனரல் அஸ்பாக் வதீம் கூறும்போது, அமெரிக்க கூட்டுப்படைகள் எல்லையில் விமானப்படையை தயாராக வைத்திருப்பதாக அறிகிறோம்.
இதை தடுக்கும் நோக்கத்துடன் நாங்களும் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்று கூறினார். இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவ பாதுகாப்பு கமிட்டி கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் அமெரிக்க படைகள் தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அமெரிக்கா கடந்த 27-ந்தேதி நடத்திய தாக்குதலை போல இனி தொடர்ந்து தாக்கும். அதற்கு இடம் அளிக்க கூடாது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க படை கள் எல்லையில் தயார் நிலையில் இருப்பதாக கூறும் தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது.

0 கருத்துகள்: