தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.11.11

இஸ்ரேலிய இராணுவத்தாரை கைதுசெய்தால் பணமுடிப்பு! – சவூதி அறிஞர் கருத்துக்கு இளவரசர் ஆதரவு!


151986_345x230
கடந்த மாதம் இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவரை விடுவிப்பதற்குப் பகரமாக, இஸ்ரேலின் சிறையில் வாடும் 1027க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களை விடுவிக்க வேண்டுமென்று, பலஸ்தீனிய ஹமாஸ் அமைப்பு கோரி, அதன்படி பல்வேறு தரப்பட்ட 1027 பலஸ்தீனியக் கைதிகளை மீட்டெடுத்தது.ஆனால், பலஸ்தீன கைதிகள் 
விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேலிய வலதுசாரி குடும்பமொன்று, விடுவிக்கப்பட்ட பலஸ்தீன கைதிகளைக் கொலை செய்யும் ஒவ்வொரு இஸ்ரேலியருக்கும் பெரும் பணமுடிப்பு (100,000 டாலர்கள்) அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
இதற்கு மறுமொழியாக, தனது ஃபேஸ்புக்கில் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த சவூதியின் மத அறிஞர் அவாத் அல் கர்னீ என்பவர், இனி இஸ்ரேலிய இராணுவ வீரர்களைக் கைது செய்யும் பலஸ்தீனியர் ஒவ்வொருவருக்கும் தானும் 100,000 டாலர்கள் பணமுடிப்பு அளிப்பதாக பதிலளித்திருந்தார்.
இந்த அறிவிப்பைக் கண்ட ஃபேஸ்புக் நிர்வாகம், அவாத் அல் கர்னீயின் பக்கத்தை முடக்கி வைத்தது.
அதே சமயம், இஸ்ரேலிய வலது சாரி அமைப்பொன்று, அவாத் அல் கர்னீயின் தலைக்கு விலையாக, அவரைக் கொலை செய்பவர்களுக்கு தான் 1மில்லியன் டாலர்கள் அளிப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், அவாத் அல் கர்னீக்கு ஆதரவாக, சவூதி இளவரசர் காலித் பின் தலால் என்பவர் தலீல் தொலைக்காட்சியில் பேட்டி அளித்துள்ளார்.
“டாக்டர் கர்னீ, உங்களுக்கு முழு ஆதரவும் அளிக்கிறோம். நீங்களும் ஒரு மில்லியன் டாலர் தொகையை அறிவியுங்கள். மீதமுள்ள 900,000 டாலர்களை நான் தருகிறேன்” என்று அப்போது அவர் கூறியுள்ளார்.
இளவரசர் காலித் பின் தலால், உலகக் கோடீசுவரர்களில் ஒருவரான இளவரசர் வலீத் பின் தலாலுடைய சொந்த சகோதரர் என்பது குறிக்கத்தக்கது.

0 கருத்துகள்: