கூகுள் பிளஸ் என்று அறிமுகமாகியிருக்கும் கூகுளின் சமூக வலைத்தளம் இப்போது பேஸ்புக்கிற்கு பெரும் போட்டியாக மாறியிருக்கிறது. கடந்த யூன் மாதம் ஆரம்பித்த இந்த வலைத்தளம் தற்போது நாற்பது மில்லியன் அங்கத்தவர் இணையுமளவுக்கு வேக வளர்ச்சி பெற்றுள்ளது. பேஸ்புக்கைவிட
முக்கியமான சமுதாய வலைத்தளமாக இது வளர மேலும் காலமெடுக்கும் என்றாலும் ஒப்பீட்டு ரீதியாக இதன் வளர்ச்சி அதிகமாக உள்ளது. பேஸ்புக் ஆரம்பிக்கப்பட்டபோது முதல் பத்து மாதங்களிலேயே ஒரு மில்லியன் அங்கத்தவர் இணைந்தனர். ஆனால் இது ஒரு சில மாதங்களில் 40 மில்லியனுக்கு உயர்ந்துவிட்டமை இணைய உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் தனிநபராக அங்கத்தவர்களை இணைக்க இதுவோ குடும்பம், நண்பர்கள் என்று கொத்துக் கொத்தாக அங்கத்தவரை இணைக்கும் வழி முறைகளை கொண்டுள்ளது. தற்போது பேஸ்புக்கில் 750 மில்லியன் அங்கத்தவரும் ரிவிஸ்டரில் 200 மில்லியன் அங்கத்தவரும் உள்ளனர். இதை கூகுள் பிளஸ் எட்டித்தொட காலமெடுக்கும். கூகுள் பிளசில் ஒரே நேரத்தில் ஒன்பது பேர் கதைக்கலாம், படங்களை பரிமாறலாம், மேலும் தெருவில் போகும்போதே தொலைவில் உள்ளவரின் ஒளிப்படம் பார்த்து உரையாடலாம். இதுபோல ஏராளம் புதுமைகளுடன் வெளியாகியுள்ளது. பேஸ்புக்கை வீழ்த்துவதற்காக கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சவால் இதுவாகும். காரணம் கூகுள் பிளஸ் ஏறத்தாழ பேஸ்புக்கை போலவே இருப்பதாக பலர் கூறுகிறார்கள். இதற்கான காணொளி :
0 கருத்துகள்:
கருத்துரையிடுக