தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.10.11

திருச்சி புத்தகக் கண்காட்சி


திருச்சிராபள்ளி: ஒருசோற்றுப்  பறவைகளெல்லாம் விருந்துண்ண திருச்சி வாசவி மஹாலுக்கு அடுத்தவாரம் வரவிருக்கின்றன. ஆம் திருச்சி ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்து நடத்தும் புத்தகக் கண்காட்சி அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. அது மிகப் பழமையானதும் பெரியதும் கூட.  அது உயிருக்கு உயிரான புத்தகப்பிரியர்களுக்காக  நியாயமான தகுதிக்கேற்ப விலைகளில்  புத்தகக்  கடைகளை விரிக்கவுள்ளது.
வெள்ளிவிழாவை கண்டுவிட்ட இந்த புத்தகக் கண்காட்சி, தன் வரலாற்றில்
எத்தனையோ மேடு பள்ளங்கள் சந்தித்திருக்கிறது.  ஆனாலும்,  அது திருச்சிக்காரர்களை விரட்டியடித்து விடாமல் தக்கவைத்துக்கொண்டுள்ளது என்பதனை குழந்தைகள் தங்கள் பெற்றோரை புத்தகங்கள் வாங்கும்படி கெஞ்சும் காட்சியிலிருந்து தெரிந்துகொள்ளலாம். 60க்கும் மேற்பட்ட ஸ்டால்களைக் கொண்ட இந்த கண்காட்சி தமிழ், ஆங்கில இலக்கியங்களில் பல்வேறு துறை புத்தகங்களையும் நம் கண்முன் விரிக்கவுள்ளது.  ஆங்கில வாசகர்கள் கூட அழகான மேசை புத்தகங்களாலும், பல தரமான, எளிய விலை இறக்குமதியான ஆங்கில நூல்களாலும், மேலும் காதல் இலக்கியங்கள், ராபின் ஷர்மா,சேட்டன் பகத், சிட்னி ஷெல்டன் ஆகியோரின் நூல்களாலும் கவரப்பட்டு ஆங்காங்கே நின்றுவிடுவார்கள்..

சுய முன்னேற்றம் பற்றிய புத்தகங்கள்தாம் தற்போதைய   ரசனையாகும். வாழ்க்கை வரலாறுகள், சரித்திர நாவல்கள், அரசியல் கட்டுரைகள் என பல ஸ்டால்கள் இடம்பெற்றிருக்கும். குழந்தைகள் இலக்கியம், மத நூல்கள், ஜோதிடம், யோகா, தேக ஆரோக்கியம், சமையல் போன்ற புத்தகங்களும் பலரின் கவனத்தை ஈர்க்கும். பிரபல ஆங்கில நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புப் புத்தகங்களுக்கும் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பில் கேட்ஸ்ஸுடன் சே குவேரா நூல்கள் போட்டியிடுகின்றன.

போட்டித் தேர்வுகளை சந்திக்கத் தயாராகிவரும் மாணவர்களுக்கு NCERT,TOEFL, மற்றும் வங்கி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை நூல்களும் குறைந்த விலையில் உள்ளன. மல்டிமீடியா நூல்களும் இடம் பெறுகின்றன. பள்ளிக்கு செல்லவிருக்கும் அரும்புகளுக்கும்,  ஏன் கல்லூரி மாணவர்களுக்கும் கூட,  சுவையான விளையாட்டு சிடிக்கள் இடம் பெறுகின்றன. பன்னாட்டு சினிமா ரசிகளுக்காக ஒருபுறமும், மறுபுறம், புது தில்லிகாரர் ஒருவரால் உருவாக்கப்பட்ட புத்தகங்கள் படிப்பதற்கு ஏதுவான நவீன கருவிகள் அடங்கிய பிரத்யேக கடையொன்றும் கூட உள்ளது.

இந்த புத்தகக் கண்காட்சியைப் பற்றி குறைகூறுவோரும் இல்லாமல் இல்லை. ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பி.நாராயணசாமி கூறுகையில், " பிரபலமான புத்தகங்கள் கிடைக்கின்றனவே தவிர, அறிவு சார்ந்த புத்தகங்களைத் தேடுவோருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்" என்று குறிப்பிடுகிறார். எம்.சிவகுமார் என்பவர் கோபமாகக் கூறுகையில், " இத்தகைய கண்காட்சிகளில் சிற்சில புத்தகங்களே மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. புத்தகக் கண்காட்சி என்பது வெளியில் அதிகம் கிடைக்காத  அரிய புத்தகங்களை வழங்குவதாக அமையவேண்டும்" எனக் குறிப்பிடுகிறார்.

பல புத்தக வெளியீட்டாளர்கள் சென்னையிலிருந்துதான் வருகிறார்கள்.  அவர்கள் இந்த கண்காட்சி நல்லமுறையில் விளம்பரப் படுத்தப் படாததால் பல பெரிய பதிப்பாளர்கள் கல்ந்து கொள்வதில்லை என்று குறை கூறுகிறார்கள். மேலும் பலர் புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடம் திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்திலிருந்து, மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காலுக்கடியில் ஆடுகின்ற பலகைத் தளம், தலையை இடிக்கும் மின்விசிறிகள் போன்ற இடைஞ்சல்கள் ஏதும் இல்லாமல் அங்கு விஸ்தாரமான ஸ்டால்களும் பருமனான புத்தகங்களைக் கூட கையிலெடுத்து ஆராய்ந்து வாங்கும்படி இருந்தது என்று கூறுகிறார்கள். அதே கருத்தைக் கூறும் சிதம்பரம் என்னும் பதிப்பாளரும், "நெய்வேலி, கோவை, ஈரோடு போன்ற இடங்களை ஒப்பிடும்போது திருச்சி புத்தகக் கண்காட்சிக்கும் இன்னும் விஸ்தாரமான இடம் வேண்டும்" என்று குறிப்பிடுகிறார். ஆனால் அவர்களின் ஒருமித்தக் கருத்து என்னவென்றார்ல் திருச்சியில் புத்தகம் படிப்பவர்கள் எண்ணிக்கை பெருகிவருகிறது என்பதே ஆகும்.  ஆனால் "புத்தகக் கண்காட்சி -25" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கண்காட்சிக்கு விளம்பரம் செய்யும் வகையில் போர்டுகள் வைக்கமுடியாத வகையில் திருச்சிராப்பள்ளி மேற்கு இடைத் தேர்தல் வந்துள்ளது என்று வருந்துகிறார் இதன் தலைவர் பஞ்சநாதன்.

இந்த பத்து நாள் புத்தகக் கண்காட்சி அக்டோபர் 2-ம் தேதி தொடங்குகிறது.  கண்காட்சி நேரம் வார இறுதி நாட்களில் காலைi 10.30 மணியிலிருந்து இரவு 8.30 மணிவரையிலும், மற்ற நாட்களில் மதியம் 2.30 மணியிலிருந்து இரவு 8.30 மணிவரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தக்ப் பிரியர்களை கவரும் வகையில் பல புத்தக ஆசிரியர்களைப் பற்றிய புதையல் தேடும் நிகழ்ச்சியும், பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், எழுத்தாளர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் விழா அரங்கில் நடைபெறவுள்ளன.

0 கருத்துகள்: