சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கிலிருந்து நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ஏற்கனவே ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் பெங்களூர் நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இதில் குற்றம்
சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜரவாதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கூறுவது வழக்கை தாமதப்படுத்தும் செயல். விலக்கு அளிக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக