பாலஸ்தீனத்துடன் நடைபெறும் நெடிய போர் இஸ்ரேலின் பெரும்பான்மை மக்களை வறுமைக்குழிக்குள் தொடர்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறது. வருடந்தோறும் அவர்களுடைய சலுகைகள் குறைக்கப்பட்டு போருக்காக பணம் இறைக்கப்பட்டு வருகிறது. அப்படி நடந்தாலும் தமக்கு பக்கத்தில் ஒரு சுதந்திர நாடு வருவதை இஸ்ரேலிய மக்கள் விரும்பவில்லை. இன்றுள்ளதைப் போலவே கலவரம் மிக்க நாடாக அது இருப்பதையே பெரும்பாலான மக்கள் விரும்புவதாக கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன.
பாலஸ்தீனம் தனி நாடானால் தமக்கு பாரிய ஆபத்து வரும் என்று இஸ்ரேலிய பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 2001 – 2005 காலப்பகுதியில் போருக்காக இஸ்ரேல் 100 பில்லியன் குறோணர் செலவிட்டுள்ளது. 2008ம் ஆண்டு 19.9 வீதமாக இருந்த ஏழைகள் தொகை இப்போது 47 வீதமாக அதிகரித்துள்ளது. பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றுக்கான ஒதுக்கீடுகள் குறைந்து தரம் கெட்டுவிட்டது. பணக்காரர் ஏழைகள் இடைவெளி அதிகரித்து செல்கிறது, சம்பள விகிதம் 7 வீதம் வீழ்ந்துவிட்டது. மொத்தத்தில் பாலஸ்தீனரைப் போலவே இஸ்ரேலியரும் பெரும் பொருளாதார வீழ்ச்சி கண்டுள்ளதாக இஸ்ரேலிய சமூகவியல் ஆய்வாளர் சலோமே மெய்ரால் தெரிவிக்கிறார். சமுhயத்தில் நிலவும் ஏழை பணக்காரர் வேறுபாட்டை குறைக்கும்படி 450.000 பேர் சில வாரங்களுக்கு முன் ஊர்வலம் போனது தெரிந்ததே. நிதர்சனம் இப்படி இருந்தாலும் தமிழருக்கு ஒரு தனிநாடு வருவது சிங்களவருக்கு வயிற்றைக் கலக்குவதைப் போலவே பாலஸ்தீனருக்கு தனி நாடு வருவது இஸ்ரேலியருக்கு வயிற்றைக் கலக்குகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக