தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.9.11

மோடி உண்ணாவிரத நிகழ்ச்சிக்காக அரசுப் பணம் தவறான வழியில் செலவிடப்பட்டது


மோடி தனது பிறந்த நாளான செப்டம்பர் 17-ஐ ஒட்டி அனைத்துப் பிரிவனரிடையே நல்லிணக்கம் ஏற்பட மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்தார்.


இந்த உண்ணாவிரதம் குஜராத் பல்கலைக்கழக வளாக அரங்கில் பொது நிகழ்ச்சியாக நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், ஆன்மிகத் தலைவர்கள் பங்குபெற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட செலவுக் கணக்கை அளிக்கும்படி கேட்டு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநரின் கணக்குக் கேட்கும் கடிதம் புதிய சர்ச்சையைக் கிளம்பியுள்ளது.


இதில் நிகழ்ச்சிக்கு உண்டான செலவுகள், இந்தச் செலவுகளை செய்ய எவ்வாறு ஒப்புதல் பெறப்பட்டது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தத் தகவலை ஆளுநரின் அலுவலக அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார்.


உண்ணாவிரத நிகழ்ச்சிக்காக அரசுப் பணம் தவறான வழியில் செலவிடப்பட்டது என்று புகார் மனு அளிக்கப்படதன் பேரில் இந்தக் கடிதத்தைத் தனது முதன்மைச் செயலாளர் அரவிந்த் ஜோஷி மூலம் ஆளுநர் எழுதியுள்ளார். மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலரிடம் விவரம் கேட்டு இந்தக் கடிதம் செப்டம்பர் 22-ம் தேதி எழுதப்பட்டுள்ளது.


அண்மையில், குஜராத் மாநில லோக் ஆயுக்தவைத் தன்னிச்சையாக ஆளுநர் நியமித்ததை முதல்வர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


மேலும், "உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் அளிக்கும் புகார் மனுக்களின் பேரில் அரசு அதிகாரிகளை விளக்கமளிக்கும்படி ஆளுநர் நேரடியாக உத்தரவிடுகிறார்.


இது மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதாகும். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கவிழ்க்க சதி செய்யும் ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்' என்று மோடி வலியுறுத்தி வருகிறார்.


இந்த வேளையில் ஆளுநர் எழுதியுள்ள கடிதம் மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாகுஜராத் ஜனதா கட்சித் தலைவர் கோவர்தன் ஜடாபியா என்பவர் அளித்த புகார் மனுவை ஆதாரமாக வைத்து ஆளுநர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

0 கருத்துகள்: