தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.9.11

லோக்யுக்தா பிரச்சனையால் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலுக்கு மோடி வருகை தர மறுப்பு


images
புதுடெல்லி:பிரதமர் மன்மோகன் சிங்கால் ஏற்ப்பாடு அழைப்பு விடுக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலின் சந்திப்புக்கு வருகை தர குஜராத் முதலமைச்சர் மறுப்பு விடுத்துள்ளார்.
இதற்க்கான காரணம், லோக் ஆயுக்தா சட்டத்தை குஜராத் மாநிலத்திற்கு தனிப்பட்ட முறையில் அமைக்க வேண்டும் என்ற குஜராத் கவர்னர் கம்லா பெனிவாலால் சமர்பிக்கப்பட்ட அறிவிப்பை, மத்திய அரசாங்கத்திடம் திரும்பப் பெறுமாறு
மோடி கேட்டுக் கொண்டார், ஆனால் மத்திய அரசு அதை ஏற்க மறுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து மோடி மிக வருத்தத்தில் உள்ளதால் இந்த சந்திப்பை ஏற்கு மறுத்துள்ளதாக அறியப்படுகிறது.
கவர்னர் இந்த அறிவிப்பை சமர்பிக்கும் முன் முதலமைச்சர் மோடியை கலந்தாலோசித்து இருக்க வேண்டும் என்று மோடி மற்றும், பி.ஜே.பி- யும் தெரிவித்துள்ளது, இந்த விவகாரத்தால் இந்த வாரம் முழுவதும் பாராளுமன்றம் முடங்கி போய் உள்ளது.
ஆனால் இதற்க்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி, அரசியலமைப்பு சட்டப்படி கவர்னர் இதை பற்றி முதலமைச்சரிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று இல்லை என்றும், வேண்டும் என்றால் உயர்நீதிபதி ஆலோசனை மட்டும் போதுமானது என்றும் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்: