
அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. லிபியாவில் கடந்த 6 மாதங்களாக அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நேட்டோப்படையினரும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக போரிட்டு வருகின்றனர். கடாபியின் வசம் இருந்து பானிவாலித், பெங்காஸி உள்ளிட்ட நகரங்கள் வீழ்ந்தன.
தலைநகர் திரிபோலி கிளர்ச்சியாளர்களின் வசம் சிக்கியது. இதனால் அதிபர் கடாபி
தனது 42 ஆண்டுகால ஆட்சியை விட்டு விலகினார்.இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் முன்னாள் படைத்தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் நேற்று தனி விமானம் மூலம் முதன் முறையாக தலைநகர் திரிபோலி வந்தார்.
அவருக்கு கிளர்ச்சியாளர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அப்போது வழிநெடுகிலும், கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கியை உயர்த்தி முஸ்தபாவிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக