தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.8.11

போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தும் போலீஸ் அதிகாரிகளை தூக்கிலிடவேண்டும் – உச்சநீதிமன்றம் காட்டம்


supreme court
புதுடெல்லி:போலி என்கவுண்டர் கொலைகளை நிகழ்த்தும் போலீஸ் அதிகாரிகளை தூக்கிலிடவேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜு, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இத்தகையதொரு கருத்தை வெளியிட்டுள்ளது.
போலி என்கவுண்டர் கொலை வழக்குகளில்
குற்றஞ்சாட்டப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த இரண்டு மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் சரணடைய கோரிய நீதிமன்றம் இத்தகையதொரு கருத்தை வெளியிட்டது.
2006 அக்டோபர் 23-ஆம் தேதி தாராசிங் என்ற குண்டர்கள் தலைவரை போலி என்கவுண்டரில் கொலைச்செய்த வழக்கில் தொடர்புடைய கூடுதல் டி.ஜி.பி அரவிந்த் ஜெயின், போலீஸ் சூப்பிரண்ட் அர்ஷத் ஆகியோர் சரணடையாவிட்டால் இவ்வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ அவர்களை கைதுச்செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தாராசிங் கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் சி.பி.ஐக்கு உத்தரவிட்டது. தனது கணவரை ராஜஸ்தான் போலீஸ் கடத்திச்சென்று கொலைச் செய்தது என குற்றம் சாட்டி தாராசிங்கின் மனைவி சுசீலா தேவி உச்சநீதிமன்றத்தை அணுகினார்.
தாராசிங்கை கடத்திச் சென்ற போலீசார் பின்னர் அவர் போலீசாருடன் நிகழ்ந்த மோதலில் கொல்லப்பட்டார் என போலீஸ் பொய் கூறியது என சுசீலா தேவி தனது புகார் மனுவில் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதுத்தொடர்பாக நீதிபதி மார்கண்டேய கட்ஜு கருத்துக் கூறியதாவது: சட்டத்தின் பாதுகாவலர்களாக மக்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ்காரர்கள் ஒப்பந்த கொலையாளிகளாக மாறி மக்களையே கொலைச்செய்ய முயற்சிக்கின்றார்கள். சாதாரண மனிதர்கள் குற்றம் செய்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்படும்.ஆனால், போலீஸ்காரர்கள் குற்றம் செய்தால் இன்னும் கடினமான தண்டனையை வழங்கவேண்டும்’ என தெரிவித்தார்.

0 கருத்துகள்: